ஹெல்சிங்கி:
மது போதையில் இருந்த தன் வீடியோ’வும் புகைப்படமும் வெளியானது குறித்து பின்லாந்து பிரதமர் சன்னா மரீன் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிரதமரான சன்னா மரீன் 37, உலகின் மிக இள வயது பிரதமர் என்ற பெருமைக்குரியவர். சமீபத்தில் இவருடைய வீட்டில் நடைபெற்ற ‘பார்ட்டி’ ஒன்றில் தன் தோழியருடன் மது அருந்தி நடனம் ஆடிய வீடியோ கடந்த வாரம் வெளியானது. இது சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பலரும் கண்டனம் தெரிவித்தனர் .
இது குறித்து சன்னா மரீன் கூறுகையில் ”நான் மது அருந்தி நடனம் ஆடியது உண்மை தான். ஆனால் வேறு போதைப் பொருள் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை” என்றார்.