டில்லி:

ற்போதைய மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று காலை திடீரென முன்னாள் பிரதமரும் நிதி அமைச்சருமான மன்மோகன் சிங் வீட்டுக்கு வருகை தந்து அவரை  சந்தித்து பேசினார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஜூலை 5ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதன்முறையாக நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ள நிர்மலா சீத்தாராமன், பட்ஜெட் தொடர்பாக தீவிர ஆலோசனைகள் நடத்தி வருகிறார். பட்ஜெட் குறித்து மாநில நிதி அமைச்சர்கள் தொழிலதிபர்கள் உள்பட பல தரப்பில் இருந்து கருத்துக்களை பெற்றுள்ள நிர்மலா இன்று திடீரென முன்னாள் நிதி அமைச்சரும், பிரதமருமான பொருளாதார மேதை மன்மோகன் வீட்டுக்கு வந்து நேரில் சந்தித்து பேசினார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது மரியாதையை நிமித்தமான சந்திப்பு என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.