டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில்,   நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்பட நிதித்துறை துணைஅமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மத்திய அரசின் 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டுக்கான பொதுபட்ஜெட் இன்று  ( பிப்ரவரி 1 ஆம் தேதி) காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்திய வரலாற்றில் முதன்முறையாக அச்சு வடிவில் இல்லாமல், மின்னணு முறையில் (டிஜிட்டல்) முறையில் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை இன்று நாடாளுமன்றத்தில் நிதிஅமைச்சர் தாக்கல் செய்கிறார்.

முன்னதாக நிர்மலா சீத்தாராமன்   மற்றும்   அனுராக் தாக்கூர் மற்றும் நிதி அமைச்சக மூத்த அதிகாரிகள் பட்ஜெட் அடங்கிய லேப்டாப்புடன்  நிதி அமைச்சகத்தில், இருந்து கிளம்பி, குடியரசுத் தலைவர் மாளிகை சென்றடைந்தனர். அங்கு குடியரசுத் தலைவரை சந்தித்த்து, பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்தினர்.

பட்ஜெட் கூட்டத் தொடரானது, மக்களவை பிற்பகலிலும், மாநிலங்களவை முற்பகலிலும் நடைபெற உள்ளது.   முதல்கட்ட தொடர்,  வரும் 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பின்னர் 2வது கட்டத் தொடர் மாா்ச் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.