டெல்லி
இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பொ0ருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார்/
ஆண்டின் முதல் தொடரான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி உரையுடன் ர் தொடங்குவது வழக்கமாகும். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
இன்றைய கூட்டத்தொடரில் ஜனாதிபதி முர்மு சுமார் 1 மணி நேரம் உரையாற்றிய பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. 011இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை (சனிக்கிழமை) தாக்கல் செய்கிறார்
இன்று மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டின் முதல் பாதியில் உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.