சென்னை

மிழகத்தில் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 11 மணி அளவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்ற தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து விரைவில் வாக்காளர்கள்  இறுதிபட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் இருப்பதாக புகார் கூறப்பட்டது. ஒரே வாக்காளரின் பெயரில் பல இடங்களில் இருப்பதாகவும், இறந்தவர்கள் பெயர்கள், விடுபட்டவர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் இருப்பிடம் மாற்றம் போன்ற பணிகள் செய்ய வேண்டியிருப்பதால், கால அவகாசம் தேவை என தமிழக தேர்தல் ஆணையம் மத்திய தேர்தல் ஆணையத்திடம் அவகாசம் கோரியது.

அதைத்தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல்  ஜனவரி 31 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள் ளோம் என சத்தியபிரதா சாகு தெரிவித்திருந்தார். இநித  நிலையில், நாளை திட்டமிட்டபடி வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் காலை 11 மணிக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், சென்னையில் வாக்காளர் பட்டியல் விவரத்தை பகல் 12 மணிக்கு தேர்தல் அதிகாரி வெளியிடுவார் என்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை பல்வேறு கட்டங்க ளாக நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதில் தமிழகத்தில் மே மாதத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு மே மாதம் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் குறித்து ஏற்கனவே ஆலோசனை நடந்த நிலையில் இன்று இரண்டாவது கட்ட ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில்  தமிழக டிஜிபி, காவல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், மக்களவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்துவிட்டதாக தகவல் அளித்துள்ளார்.

மக்களவை தேர்தலுடன் மாநில சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறியவர், , தலைமை தேர்தல் ஆணையம் கூறினால் இரண்டையும் சேர்த்து நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என்றும், மக்கள் தங்கள் பெயர்களை இந்த பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.