புதுடெல்லி: பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவக்குவது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று ரயில்வே அமைச்சக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதையொட்டி 2 நாட்களாக பல்வேறு செய்திகள், ரயில் சேவை இயக்கம் குறித்து வந்து கொண்டிருக்கின்றன.
பல ரயில்கள் ஒரு குறிப்பிட்டத் தேதியில் இருந்து பயணத்தைத் தொடங்குவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. ஊரடங்கு முடிந்த பிறகு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில் சேவையை இயக்குவது குறித்து சிறந்த சாத்தியமான முடிவுகளை ரயில்வே நிர்வாகம் எடுக்கும். அந்த முடிவுகள் குறித்து, தொடா்புடைய அனைவருக்கும் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.