தெலுங்கு பிக் பாஸ் இரண்டாவது சீசன் மூலம் பிரபலமானவர் நுதன் நாயுடு.

கடந்த ஆகஸ்ட் 28 அன்று நுதன் நாயுடுவின் வீட்டில் இருந்த செல்போன் ஒன்று தொலைந்து போனது. தங்கள் வீட்டில் பணிபுரிந்து வரும் தலித் இளைஞரான பாரி ஸ்ரீகாந்த் தான் திருடியிருக்க வேண்டுமென ஸ்ரீகாந்த்தை அடித்து துன்புறுத்தி அவருக்கு மொட்டை அடித்துள்ளார்.

தாக்கப்பட்ட ஸ்ரீகாந்த் விசாகப்பட்டினம் போலீஸாரிடம் புகாரளித்துள்ளார். இது தொடர்பாக மறுநாள் நுதனின் மனைவி ப்ரியா மாதுரி உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களை காப்பாற்ற தான் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரமேஷ் என்று கூறி தனக்கு வேண்டிய ஏழு பேருக்கு மருத்துவ சான்றிதழ் வேண்டும் என ஆந்திரா மருத்துவ கல்லூரியின் முதல்வர் மற்றும் கிங் ஜார்க் மருத்துவமனை மேலதிகாரிகளுக்கு போன் செய்து கேட்டுள்ளார்.

விசாரணையில் நுதன் நாயுடு ஐஏஎஸ் ரமேஷைப் போல ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்துள்ளது.

இதனிடையே விசாகப்பட்டினத்திலிருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து மங்களூரு செல்ல முயன்ற நுதன் நாயுடுவை கர்நாடக போலீஸாரின் உதவியுடன் விசாகப்பட்டினம் போலீஸார் கைது செய்தனர்.