இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .
நடிகை ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன் , அமிதாப் பச்சன் , விஷால் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர்.
இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் ஒளிப்பதிவாளராகவும், முன்னணி இயக்குநராகவும் வலம் வரும் தேஜாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் ஒரு வெப் தொடரின் ஷூட்டிங்கில் இருந்த இயக்குநர் தேஜா, கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்படுவதால், டெஸ்ட் எடுத்துள்ளார். அதில் அவருக்கு பாசிட்டீவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதை தொடர்ந்து இப்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.