உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்ததும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கூட பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தற்போது ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருவதால் பெட்ரோலிய பொருட்களின் விலை நீண்ட நாட்களாக உயர்த்தப்படாமல் அப்படியே உள்ளது, தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொடும் என்று கூறப்படுகிறது.

7 ம் தேதி நடைபெற இருக்கும் கடைசி கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ளது,

இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “உடனடியாக உங்கள் வாகனங்களில் டேங்க் நிரம்ப பெட்ரோல் போட்டுக்கொள்ளுங்கள்”

“மோடி அரசின் தேர்தல் தள்ளுபடி முடியப்போகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உக்ரைனில் இருந்து மாணவர்களை இந்தியா அழைத்து வர முயற்சிகள் மேற்கொண்டு வரும் மோடி அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் எனும் பாரத்தை மக்கள் தோள் மீது இறக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.