புனே: அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது, அந்த அளவுக்கு அரசு ஊழியர்களின் மனநிலை மாறி உள்ளது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டி உள்ளார்.
மத்திய, மாநில அரசு அலுவலகங்களில், அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர். இல்லாவிட்டால் இங்கே ஒன்றும் நடக்காது. ஆவணங்கள் மேல் லஞ்சம் வைத்தால் அது வேகமாக நகரும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி குற்றம் சாட்டி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. இவர் அவ்வப்போது தான் பதவியில் இருக்கும் பாஜக கூட்டணி அரசையும் விமர்சித்து வருகிறார். அந்த பிரதமராக இவர் வருவார் என்றும் கூறப்படுகிறது. தீவிர ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியாக இவர், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது, மத்திய, மாநில அரசுகளில் லஞ்சம் கொடுத்தால் தான் அதிகாரிகள் வேலை செய்கிறார்கள். லஞ்சம் கொடுக்காவிட்டால் இங்கே ஒன்றும் நடக்காது என்று பரபரப்பாக பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புனே பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டு சிறபுரை ஆற்றினார், அப்போது, தற்போது உள்ள நடைமுறையில் இருந்து இளைஞர்கள் பாடம் கற்க வேண்டும். பொறியாளர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனுடன் பணியாற்ற வேண்டும். தேவையற்ற தாமதங்களைத் தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
தொடர்ந்து பேசியவர், தேசிய நெடுஞ்சாலை துறையின் திட்டங்கள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தாமதமாவதற்கும், விபத்துக்கள் அதிகம் நடப்பது, உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதற்கு காரணம் தவறுதலாக தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள்தான். விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதில் கவனம் தயாரித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். திட்டங்கள் தாமதமாவதை குறைக்கலாம்.
அரசு துறைகளில் வெளிப்படைத்தன்மை, துரித முடிவு எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆனால், ஒரு சில அதிகாரிகள் மேலதிகாரிகள் உத்தரவிட்டால்தான் தங்கள் வேலையை கூட செய்கிறார்கள். விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதில் கவனம் தயாரித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். திட்டங்கள் தாமதமாவதை குறைக்கலாம்.
பணிகளை விரைந்து முடிக்க ஆவணங்கள் மேல் லஞ்சம் வைத்தால் அது வேகமாக நகரும் நிலை உள்ளது. லஞ்சம் கொடுக்காவிட்டால் இங்கே ஒன்றும் நடக்காது என்றவர், நெடுஞ்சாலையில் சிறிய பள்ளங்கள் ஏற்பட்டால் அதை சரி செய்ய வேண்டிய அதிகாரி, தனக்குதான் யாரும் உத்தரவிடவில்லையே என்று நினைத்து சும்மா இருந்து விடுகிறார்கள். குழியை சரிசெய்ய வேண்டும் என்று உயரதிகாரி உத்தரவிட்ட பிறகுதான் பணியை செய்கிறார்கள்.
விதிப்படி உயர்அதிகாரி உத்தரவிட வேண்டும். சட்டப்படி சாலை குண்டும் குழியுமாக இல்லாமல் சமமாக இருக்க வேண்டியது அவசியது. இதனால், குழியை உயர் அதிகாரி உத்தரவிடாவிட்டாலும் சீர் செய்வது அதிகாரிகள் கடமை. ஆனால், அதை அதிகாரிகள் உணரவில்லை.
அடல் சேது கடல் பாலம் அருகே முன்மொழியப்பட்ட 14 வழிச் சாலை, ரிங்ரோடு வழியாக புனேவை இணைக்கும் வகையில், மும்பை-புனே விரைவுச் சாலையில் போக்குவரத்து 50 சதவீதம் குறையும். மும்பை-புனே விரைவுச்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அடல் சேது அருகே 14 வழிச்சாலை அமைக்கப்படும். இது புனேவை ஒரு ரிங்ரோடு வழியாக இணைக்கும். பின்னர் பெங்களூருவை இணைக்கும்.
இவ்வாறு பேசினார்.
மத்திய அமைச்சரின் லஞ்சம் குறித்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது