பேருந்தில் ஜன்னல் சீட்டுக்கு நடந்த சண்டையில் இளைஞர் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
பெலகாவி நகர பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்றில் மாணவர் ஒருவருக்கும் வேறு சில இளைஞர்களுக்கு இடையே இந்த சண்டை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மேஜர் ரஷீத் சனடி (19) என்ற மாணவரை கத்தியால் குத்திவிட்டு இளைஞர்கள் இரண்டு பேர் தப்பியோடியதாகத் தெரிகிறது.
காயமடைந்த இளைஞர் மருத்துவ சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கத்திக்குத்துபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞரிடம் நடத்திய விசாரணையில் ஜன்னல் சீட்டுக்காக தகராறு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.