சென்னை

வானிலை  ஆய்வு மையம் அடுத்த 12 மணி நேரத்தில் முழுமையாக வலுவிழக்கும் என அறிவித்துள்ளது.

நேற்று மாலை 5.30 மணியளவில் பெஞ்சல் புயல் புதுச்சேரி கரையில் கரையை கடக்க தொடங்கிய நிலையில் நேற்று இரவு 10.30 – 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தற்போது புதுச்சேரி அருகே நிலை கொண்டுள்ள நிலையில் கடந்த 6 மணி நேரத்தில் சுமார் 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளதாகவும் கடந்த 3 மணி நேரத்தில் (அதிகாலை 3-6 மணி வரை) பெரும்பாலும் நகராமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பெஞ்சல் புயல் தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 3மணி அளவில் வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் அடுத்த 12 மணி நேரத்தில்  பெங்கல் புயலானது முழுமையாக வலுவிழக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது