சென்னை: கனமழை எதிரொலி: பொதுமக்களின் வசதிக்காக 24மணி நேரமும் திறந்திருக்கும் ஆவின் பாலகம் பற்றிய விவரங்களை ஆவின் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  கனமழையிலும் சென்னையில் கீழே குறிப்பிட்டுள்ள  8 ஆவின் விற்பனை நிலையங்கள் 24×7 திறந்து இருக்கும்  என ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த ஆவின் பாலகங்களில்,  பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், போதுமான அளவு பால் பவுடர் மற்றும் பால் இருப்பு வைத்துள்ளது.

ஃபெங்கல் புயல் காரணமாக, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களையும் பலர் வாங்கி இருப்பு வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கனமழையை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில், சென்னையில் தடையின்றி பால் விநியோகத்தை உறுதி செய்வதற்காக ஆவின் நிர்வாகம் சென்னை யில் உள்ள தனது பல பால் விற்பனை நிலையங்களை 24 மணி நேரமும் இயக்குவதாக அறிவித்துள்ளது.

சென்னையில் 24 மணிநேரமும் திறந்திருக்கும் ஆவின் பால் விற்பனை நிலையங்கள் வருமாறு:

1.அம்பத்தூர்
2.அண்ணா நகர்
3.மாதவரம்
4.வண்ணாந்துறை (அடையாறு) மற்றும் பெசண்ட் நகர்
5. வசந்தம் காலனி, அண்ணாநகர் கிழக்கு
6.சோழிங்கநல்லூர்
7.விருகம்பாக்கம் (வளசரவாக்கம் மெகா மார்ட் அருகில்)
8.சி.பி. ராமசாமி நிலையம், மயிலாப்பூர்

ஆவின் பால் விற்பனை நிலையத்தில் ஒரு நபர் 4 பால் பாக்கெட்டுகள் மட்டுமே வாங்க முடியும்.

மேலும், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய ஆவின் விற்பனை நிலையங்களில் போதுமான அளவு பால் பவுடர் மற்றும் பால் இருப்பு வைத்துள்ளதை உறுதி செய்துள்ளது.

மேலும், மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலும் பால் விநியோகத்தில் சீரான தன்மையை பராமரிக்க பால் பவுடர் மற்றும் பால் விநியோகிக்க சென்னையில் தற்காலிக விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.

பொதுமக்களுக்கு பால் தடையின்றி விநியோகம் செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆவின் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.‘