டெல்லி: பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த நாளை ‛Cow Hug Day’ , அதாவது பசுக்களை கட்டித்தழுவும் நாள் என கொண்டாட வேண்டும் என மத்திய அரசின் விலங்குகள் நலவாரியம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பசுவை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பெருக்கு அதிகரித்து மகிழ்ச்சி பொங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக விலங்குககள் நலவாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய கலாசாரம், கிராமப்புற பொருளாதாராரம் ஆகியவற்றின் முதுகெலும்பாக பசு உள்ளது. மேலும் நமது வாழ்க்கையை தாங்கும் வகையில் பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவியாக இருக்கிறது. இதனை நாம் அனைவரும் அறிந்துள்ளோம். மாடுகள் மனிதர்களுக்கு எல்லா செல்வங்களையும் அளிப்பதோடு, தாயை போல் ஊட்டமளிக்கும் பணியை ‛கோமாதா’ எனும் பசு மேற்கொண்டு வருகிறது.
மேற்கத்திய கலாசார தாக்கத்தால் வேதமரபுகள் சில அழிவின் விளிம்பில் உள்ளன. மேற்கத்திய கலாசாரத்தால் நமது கலாசாரம், பாரம்பரியம் என்பது மறக்கடிக்கப்பட்டுள்ளது. பசுவை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பெருக்கு ஏற்படும். அதோடு நமக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். . எனவே அனைவரும் பசுக்களின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். மேலும் மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் நேர்மறையான ஆற்றல் பெற பிப்ரவரி 14ம் தேதியை Cow Hug Day தினமாக கொண்டாட வேண்டும்”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Patrikai.com official YouTube Channel