சென்னை: பராமரிப்பு பணி மேற்கொள்ளும் வகையில், சென்னையில் நாளை அண்ணா நகரில் திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலமாவட்டங்களிலும் மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில், நாளை ( பிப்ரவரி 21ஆம் தேதி ) எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது , பின்வரும் இடங்களில் நாளைய தினம் மின் தடை செய்யப்படும் என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை மாநகரில் அண்ணாநகர் மேற்கு மற்றும் மேற்கு விரிவாக்க பகுதி முழுவதும், திருவள்ளீஸ்வரர் நகர், திருமங்கலம், என்.வி.என் நகர், CPWD குவார்ட்டர்ஸ், B,C&D செக்டர், 11 முதல் 20வது மெயின் ரோடு, எமரால்டு குடியிருப்புகள், மெட்ரோ மண்டல குடியிருப்புகள் ஆகிய இடங்கள்.
திருப்பூர் மாவட்டம் கருவலூர், முறியாண்டாம்பாளையம், குமாரபாளையம், அரசபாளையம், நைனாம்பாளையம், ஆனந்தகிரி, மருதூர், காளிபாளையம், நம்பியம்பாளையம், உப்பிலிபாளையம், மணப்பாளையம், காரைக்கால்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம் ஆகிய இடங்கள்.
அதேபோல, ஏரிபாளையம், காமநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், நல்லிகவுண்டம்பாளையம், அல்லம்பாளையம், புதுநல்லூர், சூரிபாளையம், சேரன்நகர், வெங்கிகல்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம் ஆகிய பகுதிகள்.
பல்லடம் பகுதியில் அப்பநாயக்கன்பட்டி, கேஎம் புரம், காரணப்பேட்டை, புளியம்பட்டி, ஆறுகுளம், அய்யம்பள்ளயம் ஆகியவை.
கரூர் மாவட்டத்தில் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு ஆகிய இடங்கள்.
தேனி மாவட்டத்தில் துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை ஆகிய பகுதிகள்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.