டெல்லி:
பீடி, சிகரெட் உள்பட புகையிலை பொருட்கள் மீது புதிய எச்சரிக்கை வாசகம் பொறிக்க உத்தரவிடப் பட்டு உள்ளது  இது வரும்  டிசம்பர் 1ந்தேதி முதல் அமலுக்கு வரும் என  மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நாடுமுழுவதும் பீடி, சிகரெட், புகையிலையை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இவர்களுக்கு உடல் ரீதியிலும், மன ரீதியிலும் பல தீங்குகள் ஏற்படுகின்றது என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நாட்டில் புகைப்பிடிப்பது தீமை, உடல் நலத்திற்கும் சுற்றுப்புறத்திற்கும் தீங்கு, கேன்சர் போன்ற நோய்கள் வரக் காணரமாகும் என்று எத்தனையோ அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் அறிவித்தாலும் மக்கள் அதன் தீவிரத்தை அறியாமல் வாங்கிப் புகைத்து வருகின்றனர். மது பிரியர்களும், புகை பிரியர்களும் இந்த பழக்கத்துக்கு அடிமையயாகி விடுகின்றனர்.
சமீப காலமாக இளைய சமுதாயத்தினரும் பீடி, சிகரெட், புகைக்கு அடிமையாக இருக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாக,  சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீது புதிய சுகாதார எச்சரிக்கை படம் மற்றும் வாசகங்கள் கட்டாயம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்தியாவில் தயாரித்து விற்பனையாகும் புகையிலை பொருட்கள் மீது புதிய எச்சரிக்கை வாசகம் மற்றும் படங்கள் இடம்பெற உத்தரவிட்டுள்ளது.