தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள குடிசைப்பகுதியில் வசிப்பவர் பாலு, கூலித்தொழிலாளி.
அவரது மகன் சரண், அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.
வேலை முடிந்து குடிபோதையில் வீட்டுக்கு வந்த பாலு, மகன் சரணை பீடி வாங்கி வருமாறு கூறி உள்ளார்.
கடைக்கு சென்ற சரண் நீண்ட நேரம் கழித்து, தாமதமாக வந்ததால் ஆத்திரம் அடைந்த பாலு, மகனை கண் மண் தெரியாமல் அடித்து நொறுக்கினார்.
அதோடு விடவில்லை.
அருகே பள்ளிக்கூட பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த ‘டர்பைண்டல்’ ஆயிலை எடுத்து மகன் மீது ஊற்றினார்.
பெற்ற மகன் என்றும் பார்க்காமல், தீக்குச்சியை கொளுத்தி மகன் மீது வீசினார்.
ஏற்கனவே ஆயில் ஊற்றப்பட்டிருந்த நிலையில், நெருப்பு பற்ற வைக்கப்பட்டதால், சரண் உடம்பு முழுவதும் கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
அவன் அலறி துடித்தான்.
அக்கம்- பக்கத்து வீட்டார், தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைத்தனர், பின்னர் அங்குள்ள மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்தனர்.
அவனது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
– பா. பாரதி