திருவனந்தபுரம்:
கேரளாவில் தற்போது கம்யூனிஸ்டு அரசு முதல்வர் பிணராயி விஜயன் தலைமையில் செயல்பட்டு வருகிறது. கேரளாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பயனாக உணவு பொருட்களுக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது.
கேரளா நிதி மந்திரி தாமஸ் ஐசக் கூறியதாவது: ஓட்டல், நட்சத்திர உணவு கூடங்களில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு 14.5 சதவீதம் கொழுப்பு வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பிட்சா, பர்கர் போன்ற உடனடி உணவு பொருட்களுக்கு 14.5 சதவீதம் கொழுப்பு வரி விதிக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதன்முதலாக கொழுப்பு வரி விதிக்கப்படுகிறது என்றும், ஜங்க புட் என்று அழைக்கப்படும் பிட்சா, பர்கர், டோனட்ஸ், ரோட்டி போன்ற சுவையான பேக்கரி உணவுகளுக்கும் இந்த வரி விதிக்கப்படும். பாஸ்ட் புட் கடைகள், மெக்டோனால்டு, டோமினோஸ்,. பிஸ்ஷாகட், போன்ற கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கும் இந்த வரி விதிப்பு பொருந்தும் என்றார்.
கேரள முதல்வர் தலைமையிலான அரசு இதற்கான முடிவை எடுத்துள்ளது. வரும் பட்ஜெட்டில இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும், மேலும் வரும் பட்ஜெட்டில் ரூபாய் 10 கோடி அளவுக்கு வரி உயர்வு இருக்கும் என்றும் கேரள நிதி மந்திரி கூறினார்.
கொழுப்பு வரி டென்மார்க், அங்கேரி போன்ற நாடுகளில் அமலில் உள்ளது. இதன் பயனாக குழந்தைகள் உடல் பருமனை குறைக்க ஏதுவாக கொழுப்பு வரி உதவும் என்று நம்புவதாக கூறினார்.