டெல்லி: வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்தி அரசு அறிவித்து உள்ளது.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எரிபொருள், கால விரயமும் ஏற்பட அதற்கு தீர்வு காணும் வகையில், ‘பாஸ்டேக்’ மூலம் தானியங்கி சுங்க கட்டணம் வசூல் முறை கொண்டு வரப்பட்டது.
இந்த நடைமுறை மூலமாக, வாகன உரிமையாளர்கள் முன்கூட்டியே கட்டணத்தை செலுத்தி அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதியில் இருந்து, அனைத்து தேசிய நெடுங்சாலைகளிலும் பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்படுவதாக, கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், பல இடங்களில் சுங்க சாவடிகளில் ரொக்க பரிவர்த்தனை அமலில் இருக்கிறது. இந்நிலையில், 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.