டெல்லி :
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் அடுத்த முயற்சியாக பாஸ்டேக்-ல் சேர்வதற்கான கட்டணம் தளர்த்தப்பட்டிருக்கிறது.
பாஸ்டேக் திட்டத்தில் சேர்வதற்கு தற்போது ரூ. 100 சேர்க்கை கட்டணமாக வசூலித்து வரும் நிலையில், இந்த கட்டணத்தை பிப் . 15 முதல் பிப். 29 வரையிலான 15 நாட்களுக்கு தளர்த்த முடிவெடுத்து, வாகனம் வைத்திருப்போர் தங்கள் வாகன பதிவு சான்றுடன் அருகில் உள்ள பாஸ்டேக் விற்பனை மையங்களை அணுகி இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் சுங்கக்கட்டண வசூலை டிஜிட்டல் மயமாக்கும் அரசின் முடிவில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது சுங்கச்சாவடிகளில் தனியார் ஒப்பந்ததாரர்கள் தரும் வசூல் கணக்கு மற்றும் கெடுபிடிகள் பல்வேறு வழக்குகளை சந்தித்துவரும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கை, அரசிற்கும் பொதுமக்களுக்கும் இடைத்தரகர்களால் ஏற்படும் இடைவெளியை குறைக்க உதவும் என்று சொல்லப்படுகிறது.