டில்லி,
நாட்டில் செயல்பட்டு வரும் தொலை தொடர்பு நிறுவனங்களில் அதிவேக இண்டர்நெட் இணைப்பை கொடுத்திருப்பது ரிலையன்சின் ஜியோ என்று மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்ஸ்) அறிவித்துள்ளது.
ஏற்கனவே டிராய் அறிவித்த அறிக்கையிலும் ஜியோவி முன்னணியில் இருந்த நிலையில், தற்போதும் தொடர்ந்து ஜியோவே முதலிடத்தை பிடித்துள்ளதாக கூறி உள்ளது.
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அதிவேக மொபைல் டேட்டா வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி ஜியோ, நொடிக்கு 21.8 எம்.பி. வேகத்தில் மொபைல் டேட்டா டவுன்லோடு வேகம் வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து ஐடியா செல்லுலார் நொடிக்கு 7.1 எம்பி வேகம் வழங்கியுள்ளது. வோடபோன் நொடிக்கு 9.9 எம்பி வேகத்தில் இண்ட்ர்நெட் வழங்கியுள்ளது. எனினும் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது ஜியோ டவுன்லோடு வேகம் குறைந்துள்ளதாகவும் கூறி உள்ளது.
செப்டம்பர் மாத ஆய்வின்படி, ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகம் நொடிக்கு 21.9 எம்பி வரை இருந்த தாகவும், ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்களும் தங்களது அதிகபட்சமாக நொடிக்கு 9.3 எம்பி மற்றும் 8.1 எம்பி வரையே இருந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
அப்லோடு வேகத்தை பொருத்தமட்டில், ஐடியா செல்லுலார், வோடபோன் நிறுவனங்கள் முறையே நொடிக்கு 6.2 எம்பி மற்றும் 4.9 எம்பி வழங்கியுள்ளன. பாரதி ஏர்டெல் நொடிக்கு 3.9 எம்பி வேகம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
தினசரி உபயோக அடிப்படையில் ஜியோ நெட்வொர்க் சராசரி டவுன்லோடு வேகம் நொடிக்கு 19.6 எம்பி முதல் 25.2 எம்பி வரை இருந்துள்ளது.
வோடபோன் நெட்வொர்க் டவுன்லோடு வேகம் நொடிக்கு 6.8 எம்பி முதல் 9.3 எம்பி மற்றும் ஐடியா நிறுவனத்தில் நொடிக்கு 8.6 எம்பி முதல் 9.8 எம்பி வரை இருந்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் நொடிக்கு 4.9 எம்பி முதல் 8.7 எம்பி வரை வழங்கியுள்ளது.
இதன் காரணமாக மீண்டும் ஜியோவே முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
இவ்வாறு டிராய் தனது அறிக்கையில் கூறி உள்ளது.