மும்பை: தீர்வையில்லா இறக்குமதி செய்யப்படும் மிளகால், உள்ளூர் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக, சல்மோனிலா பேக்டீரியாவுடன் கூடிய பூச்சிக்கொல்லி எச்சம் அவர்களை கவலைகொள்ள செய்துள்ளது.
பிப்ரவரி மாத புள்ளிவிபரங்களின்படி, மொத்தமாக, 1,243 டன்கள் தீர்வையில்லா மிளகு, மறு-ஏற்றுமதி நோக்கத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 440 டன்கள் பிரேசில் நாட்டிலிருந்தும், 659 டன்கள் வியட்நாமிலிருந்தும், 70 டன்கள் இலங்கையிலிருந்தும், 73 டன்கள் ஈக்வடார் நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், எம்ஐபி -இல் உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான இறக்குமதியளவு 38 டன்கள் என்ற அளவில் நிற்கிறது. வெளிநாடுகளிலிருந்து இப்படி இறக்குமதி செய்யப்படும் மிளகை விவசாயிகள் கவலையுடன் கண்காணித்து வருகின்றனர்.
அதேசமயம், இந்த மிளகு இறக்குமதி இருந்தாலும்கூட, கொச்சியின் மிளகு சந்தை, மிளகு விலையில் எந்த மாற்றமுமின்றியே இருந்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.