தர்மபுரி
தக்காளி கொள்முதல் விலை ரூ.1 ஆகக் குறைந்ததால் விவசாயிகள் தக்காளியைத் தரையில் கொட்டி போராட்டம் நடத்தி உள்ளனர்.

தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோட்டில் பெரிய தக்காளி மண்டி இயங்கி வருகிறது. இங்கு பாலக்கோடு மட்டுமின்றி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தக்காளியை விற்பனை செய்யப் பெருமளவில் எடுத்து வருவது வழக்கமாகும். தற்போது இங்கு சுமார் 200 டன் தக்காளி விற்பனைக்கு எடுத்து வரப்படுகிறது.
இங்கிருந்து கொள்முதல் செய்யப்படும் தக்காளியை வர்த்தகர்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வது வழக்கமாகும். கடந்த சிலமாதங்களாக தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி சாகுபடி அதிகரித்ததால் மண்டிக்கும் அதிக அளவில் தக்காளி வரத்து உள்ளது. ஆகவே தக்காளி கொள்முதல் விலை குறைந்து கிலோ ரூ.3 ஆனது.
நேற்று இந்த விலை மேலும் குறைந்து தக்காளி கொள்முதல் விலை ரூ.1 என ஆனதால் விவசாயிகள் கடும் விரக்தி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சுமார் 1 டன் தக்காளியை மண்டி வளாகத்தில் தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் விவசாயிகள் விவசாயத்தை நிறுத்த நேரிடும் என எச்சரித்துள்ளனர்.
[youtube-feed feed=1]