டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 196வது நாளாக தொடர்கிறது. ஆனால், இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்தியஅரசு முனைப்பு காட்ட மறுத்து வருகிறது. வேளாண் சட்டங்கள் குறித்து விசசாயிகளுடன் பேச தயாராக இல்லை என மத்தியஅரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.

கடந்த ஆண்டு மத்தியஅரசு அமல்படுத்திய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து  2020ம் ஆண்டு  நவம்பர் 26 ந்தேதி அன்று டெல்லியில் விவசாயிகள் முன்னெடுத்தனர்.  தொடர்ந்து போராட்டம் 196வது நாளாக நீடித்து வருகிறது.கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், கடும் குளிர், வெயில் பாராமல் விவசாயிகள் 6 மாதங்களை கடந்து தங்கது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். போராட்டம் எதிரொலியாக உச்சநீதிமன்றம், புதிய வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், நிபுணர் குழுவை அமைத்தும் பேச்சு வார்ங்ததை நடத்தியது. ஆனால், விவசாயிகள் எதற்கும் மசியாமல், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது ஒன்றே தீர்வு என கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். போராட்டம் 200வது நாளை தொட உள்ளது. போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து, விவசாயிகள் சங்கத்தலைவர் ராகேஷ் திகாயத் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். ஓரிரு நாளில் மேற்குவங்க முதல்வரையும் சந்தித்து பேச உள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய விவசாய அமைச்சர் தோமரிடம், வேளாண் சட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர்,  புதிய வேளாண் சட்டங்களைத் தவிர்த்து மற்ற விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது; வேளாண் சட்டங்களைத் தவித்து மற்ற பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தையில் விவசாயிகள் முவைக்கலாம் என்று உறுதிப்பட கூறியுள்ளார்.