ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூர் நடிக்கும் ‘குட் லக் ஜெர்ரி’ என்ற படத்தின் படப்பிடிப்பு பஞ்சாபில் உள்ள பாட்டியாலவில் நடந்த போது, ஷுட்டிங் தளத்துக்கு சென்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தி சினிமா உலகம் குரல் கொடுக்க வில்லை என குற்றம் சாட்டிய விவசாயிகள், படக்குழுவினர் தங்கி உள்ள ஓட்டல் முன்பும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் சண்டிகாருக்கு ஷுட்டிங் தளத்தை மாற்றி விட்டனர். அங்கு செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள புத்தகக்கடை மற்றும் பூக்கடையில் ஜான்விகபூர் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன.
தனியார் பாதுகாப்பு ஊழியர்களுடன் உள்ளூர் போலீசாரும் படக்குழுவுக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர்.
படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்களிடம் “இது புதுமுகங்கள் நடிக்கும் டி.வி. தொடரின் ஷுட்டிங்” என படக்குழுவினர் சொல்லி வருவதால், இது ஜான்விகபூர் படப்பிடிப்பு என யாருக்கும் தெரியவில்லை.
இதனால் ஷுட்டிங் அமைதியாக நடந்து வருகிறது.
– பா. பாரதி