புதுடெல்லி :

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தை அடுத்து மத்திய அரசு விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள விவசாய சங்கங்கள், அனைத்து சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்றும் ஏற்கனவே கூறியிருந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வந்த விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு சார்பில் கூட்டத்தின் இடையில் வழங்கப்பட்ட தேனீர் மற்றும் உணவு பொருட்களை ஏற்க மறுத்தனர்.

மேலும், தாங்கள் கையோடு கொண்டுவந்திருந்த உணவையே அங்கு அருந்தினர். தங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை அரசுடன் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்று அவர்கள் கூறினர்.

இதேவேளையில், விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலை தனது பத்ம பூஷன் விருதை திருப்பியளித்ததை தொடர்ந்து.

சிரோமணி அகாலிதள (ஜனநாயகம்) கட்சி தலைவரும் ராஜ்ய சபா உறுப்பினருமான திண்ட்ஷா-வும் தனது விருதை மத்திய அரசிடம் திருப்பியளிக்கப் போவதாக கூறியிருக்கிறார்.