கென்யா:
கடந்த 10 ஆண்டுகளாக மிக மோசமான வெட்டுக்கிளி தாக்கத்தை எதிர்த்து போராடி கென்யாவருகிறது, இதனால் பாதிக்கப்பட்டு நம்பிக்கை இழந்த விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தீ பக் பிக்சர் விஞ்ஞானிகள் ஒரு யுக்தியை கண்டறிந்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தாலும் அசாதாரண வானிலை முறைகளாலும், வெட்டுக்கிளியின் தாக்கம் அதிகரித்தது, இந்த வெட்டுக்கிளிகளால் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பயிர்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டன.
ஆனால் தற்போது இந்த வெட்டுக்கிளிகளை அறுவடை செய்து அவற்றை அரைத்து புரதச் சத்துள்ள உணவாக மாற்றி விலங்கு தீவனமாகவும், பண்ணைகளுக்கான கரிம உரமாகவும் மாற்றலாம் எனவும், நாங்கள் நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க விரும்புகிறோம், மேலும் இந்த பூச்சுகளை அறுவடை செய்து, புரதச் சத்துள்ள உணவாக மாற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று தீ பக் பிச்சர் நிறுவனர் லாரா ஸ்டான்போர்ட் தெரிவித்துள்ளார்.