கொல்கத்தா: ஒடிசாவை கடுமையாக தாக்கி காயப்படுத்திய ஃபனி புயல், வங்க மாநிலத்தைத் தாண்டி, தற்போது வங்கதேசத்தை அடைந்தாலும், அதன் தாக்கம் இமயமலைப் பகுதியில் நன்றாக உணரப்படுகிறது.

இமயமலையின் பலப் பகுதிகளில் இருக்கும் மலையேற்றக் குழுவினரின் கூடாரங்களை சேதப்படுத்தியுள்ளதோடு, அவர்களின் பயணத் திட்டங்களையும் பாதித்துள்ளது அப்புயல்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சிலர் தங்களின் மலையேற்றப் பயணத்தை பாதியிலேயே விட்டுவிட்டு, பேஸ் கேம்ப் பகுதிக்கு திரும்பியுள்ளனர். பேஸ் கேம்ப் பகுதியிலும் நல்ல பனிப்பொழிவு நிலவுகிறது.

அதேசமயம், வலுவான காற்றானது, அனைத்தையும் நாசமாக்கிவிடாது என்று நம்புவதாகவும், பொருத்தப்பட்ட கயிறு 4 முதல் 5 அடி ஆழம் வரை பனிக்குள் புதைந்து போனதால், நாங்கள் எங்களின் இலக்கு நோக்கியப் பயணத்தை ரத்துசெய்து திரும்பிவிட்டோம் என்றும் சில மலையேற்ற வீரர்கள் தெரிவித்தனர்.

மேலும், தொங்கும் பாறைகள் உடைவதாகவும், கூடாரங்கள், எஸ்கிமோக்களின் பனிக்கட்டி குடில்கள் போல் ஆகிவிட்டதாகவும், பயத்தால் இரவில் சரியாக உறங்க முடியவில்லை எனவும் அவர்கள் மிரட்சியுடன் தெரிவிக்கிறார்கள்.