சுமாலாந்து, சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற இகியே ஃபர்னிச்சர் நிறுவன உரிமையாளர் இங்க்வர் கம்பிரத் தனது 91 ஆம் வயதில் காலமானார்.
சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற ஃபர்னிச்சர் நிறுவனம் இகியே ஆகும். நியாயமான விலையில் திருத்தி அமைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் நாற்காலி, மேஜை, கட்டில் மட்டுமின்றி அலுவலக உபகரணங்களும் உலகப் புகழ் பெற்றவை ஆகும். தனித்தனியாக செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு பிறகு வாடிக்கையாளரின் இடத்தில் பொருத்தும் வகையில் இவைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் இங்க்வர் கம்பிரத். இவர் தனது இளம் வயதில் சைக்கிளில் பென்சில்கள் மற்றும் விதைகளை விற்பனை செய்து வந்தார். அதன் பிறகு சிறிய அளவில் கடை ஒன்றை ஆரம்பித்து சிறிது சிறிதாக வளர்ந்து இன்று ஒரு தொழில் சாம்ராஜ்யத்துக்கு அதிபராக ஆனார். இவருடைய சொத்து மதிப்புக்கள் 58.7 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ,4 லட்சம் கோடிகள் ஆகும். உலக செல்வந்தர்கள் வரிசையில் இவர் 8ஆவது இடத்தில் உள்ளார்.
இவர் நேற்று முன் தினம் உடல் நலக்குறைவால் சுவிட்சர்லாந்தில் சுமாலாந்தில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். மரணத்துக்கு சில தினங்கள் முன்பிருந்தே இவர் உடல் நலம் குன்றி இருந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு தற்போது 91 வயதாகிறது. வயோதிகம் காரணமாக இவர் தனது உறவினர்கள் அனைவரும் முன்னிலையில் மரணம் அடைந்ததாக அவருடைய காரியதரிசி அறிவித்துள்ளார்.