சென்னை
பிரபல பாடகரும் நடிகருமான சிலோன் மனோகர் சென்னையில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்
பிரபல பாப் இசைப் பாடகர் சிலோன் மனோகர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 60களில் பைலா என அழைக்கப்பட்ட இலங்கையின் நாட்டுப்புறப் பாடல்களை பாடி பிரபலம் அடைந்தவர்.
சென்னை, திருவான்மையூர், கந்தன்சாவடியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 07.20 மணியளவில் காலமானார்.அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளை புதன்கிழமை சென்னையில் நடைபெறும்.
அவரின், “சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா” என்ற பாடலை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், மலே, போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட 7 மொழிகளில் பாடியுள்ளார்.
இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த சிலோன் மனோகர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கமலஹசான், சிரஞ்சீவி போன்ற பல புகழ்பெற்ற நாயகர்களில் படங்களில் நடித்துள்ளார். அது தவிர தொலைக்காட்சித் தொட்ர்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
73 வயதான சிலோன் மனோகர் சிறுது காலமாக உடல்நலம் குன்றி இருந்தார். நேற்று இரவு இவர் சென்னையில் மரணம் அடைந்தார். இவருடைய மரணம் திரைப்பட உலகை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
அவருக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் அவர் தற்போது பாடிய சுராங்கனிப் பாடல் இதோ
[youtube https://www.youtube.com/watch?v=p9sHkoXH_q4]