டில்லி:
பிரபல பாலிவுட் நடிகையான ஊர்மிளா மடோன்கர் இந்தி, தமிழ் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அரசியலில் ஆர்வம் கொண்ட ஊர்மிளா கடந்த மார்ச் மாதம் 27ந்தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து கட்சியில் இணைந்த நிலையில், 5 மாதத்திலேயே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை மற்றும் தமிழில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் படத்தில் நடித்தவருமான ஊர்மிளா நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, கடந்த மார்ச் மாதம் 27ந்தேதி அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து, தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஊர்மிளா, தான் தேர்தலுக்காக அரசியலுக்கு வரவில்லை என்றும், தேர்தல் முடிந்த பிறகு கட்சியில் இருந்து வெளியேற மாட்டேன், காங்கிரஸ் கட்சியிலேயே தொடருவேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
அதைத்தொடர்ந்து, அவருக்கு, நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை கட்சி வழங்கியது. ஆனால், அவர் தேர்தலில் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஊர்மிளா இன்று அறிவித்து உள்ளார்.
மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.