பெங்களூரு
பிரபல நடிகை சுமலதா இன்று பாஜகவில் இணைந்துள்ளதார்.
கர்நாடகாவில் உள்ள மாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் நடிகை சுமலதா. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் உள்ள மாண்டியா தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் இவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலிலும் மாண்டியா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது., மாண்டியா தொகுதியை மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு பா.ஜ.க. ஒதுக்கியதால் அங்கு மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், கர்நாடகா முன்னாள் முதல்வருமான குமாரசாமி போட்டியிடுகிறார்.
எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று நடிகை சுமலதா அறிவித்திருந்ததுடன் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பா, மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, மாநிலச் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, முன்னாள் முதல்வர் டி.வி.சதானந்த கவுடா உள்ளிட்டோர் முன்னிலையில் நடிகை சுமலதா பா.ஜ.க.வில் இணைந்தார்.