மனித நடமாட்டம் உள்ள மற்ற கிரகங்களை தேடும் செயற்கைக் கோள்

Must read

கேப் கானவெரல், அமெரிக்கா

மெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ள டெஸ் செயற்கைக் கோள் மனிதர்கள் வாழும் மற்ற கிரகங்களை தொலை நோக்கி மூலம் தேட உள்ளது.

தி டிரான்ஸிட் எக்ஸ்ப்ளோநாட் சர்வே சாடிலைட் என்னும் ச்யற்கைக் கோள் சுருக்கமாக டெஸ் என அழைக்கப்படுகிறது.    நேற்று மாலை சுமார் 6.51 நிமிடத்தில்  சக்தி வாயந்த ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.    இந்த செயற்கைக் கோளை அமைக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா $33.7 கோடி செலவிட்டுள்ளது.   அதாவது ரூபாய் மதிப்பில் 2160 கோடி ரூபாய் ஆகும்.

இந்த டெஸ் செயற்கைக் கோளில் சக்திவாய்ந்த தொலை நோக்கி பொருத்தப் பட்டுள்ளது.  இதன் மூலம் நாசா சூரிய குடும்பத்தை ஒத்துள்ள மற்ற நட்சத்திர மண்டலங்களை ஆராய உள்ளது.    இந்த ஆய்வின் மூலம் அந்த மண்டலத்தில் பூமியைப் போல கிரகங்கள் உள்ளனவா என்பதும் அங்கு மனிதர்கள் நடமாட்டம் உள்ளதா எனவும் கண்டறிய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக் கோள் மூலம் இதுவரை கண்டறியாத ஆயிரக்கணக்கான கிரகங்களை கண்டறிய முடியும் என  நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.    இன்னும் 60 தினங்களில் குறிப்பிட்ட  பாதைக்கு டெஸ் சென்றடையும் என நம்பப்படுகிறது.   அதன் பிறகு அந்த செயற்கைக் கிரகம் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள  பாதை ஒன்றில் பயணம் செய்யும்.

More articles

Latest article