கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் வேலையில் சமூக இடைவெளியின்றி கும்பமேளா விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்வை விமர்சித்து ப்ரக்யா மிஸ்ரா என்ற பத்திரிகையாளர் செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று பட்டப்பகலில் நடுரோட்டில் இவர் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது, அதோடு நடுரோட்டில் கொலை செய்யப்பட்டதற்கான வீடியோ ஒன்றையும் இணைத்திருந்தனர்.
This is the second video, people are linking with the journalist murder. So, dear people stop circulating this and sorry for that poor woman who was stabbed to death by her husband. Dear people, thanks for your support on crime against woman and especially for woman journalist.+ pic.twitter.com/rDAOocjqEp
— Sivaguru. S (@shivaguru_TNIE) April 18, 2021
இந்த பதிவு, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து ப்ரக்யா மிஸ்ரா, தான் உயிருடனும் நலமுடனும் இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
दोस्तों जो लोग मेरे मरने की खबर फैला रहें है उन्हें मेरा ये वीडियो शेयर करके बताइए कि मैं 'ज़िंदा' हूँ❤️ https://t.co/wyTwJvib9B
— Pragya Mishra (@PragyaLive) April 18, 2021
சமூக வலைத்தளங்களில் விஷமிகள் சிலரால் இவர் கொலை செய்யப்பட்டதாக பதிவேற்றப்பட்டது வதந்தி என்பது தெரியவந்தது, மேலும், அதில் அவர்கள் வெளியிட்ட வீடியோ ஏப்ரல் 10 ம் தேதி டெல்லியில் ஒரு பெண்ணை அவரது கணவர் கொலை செய்த சி.சி.டி.வி. காட்சி என்பது தெரியவந்தது.