ஸ்ரீநகர்: கடந்த ஜூலை 18ம் தேதி ஜம்மு காஷ்மீரின் ஷோஃபியானில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய என்கவுண்டர் தொடர்பாக, சம்பந்தப்பட்ட ராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த சர்ச்சைக்குரிய என்கவுண்டரில், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவர்கள் மூவரும் சாதாரண கூலித் தொழிலாளிகள் என்றும், தீவிரவாதிகள் இல்லை எனவும், பொதுமக்களும், மறைந்தவர்களின் உறவினர்களும் ராணுவத்தினர் மீது குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் ராணுவப் படைகளின் சிறப்பு சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது மற்றும் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை முடிவடைந்துள்ளது என்றும், குற்றச்சாட்டுக்கான தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.