ப்ளூ டிக் அக்கவுண்ட் வாங்க $8 கொடுத்தா போதும் வேற எந்த ஆவணமும் தேவையில்லை என்று ட்விட்டர் நிறுவன தலைவர் எலன் மஸ்க் அறிவித்தார்.

இதனை அடுத்து ஐ-போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் முதலில் இந்த சலுகை வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பெயரில் முண்டியடித்து ப்ளூ டிக் வாங்கி அசத்திய வாடிக்கையாளர்கள் இயேசு கிறிஸ்து பெயரிலும் ப்ளூ டிக் வாங்கி ட்விட்டர் நிறுவனத்தையே திகைப்பில் ஆழ்த்தினர்.

மாதம் 719 ரூபாய் கொடுத்தால் ப்ளூ டிக் என்ற திட்டத்தை இன்று முதல் இந்தியாவில் தொடங்கி இருக்கும் நிலையில் அமெரிக்க சம்பவங்கள் இந்தியர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.

ஆதார் அட்டை மூலம் ப்ளூ டிக் வழங்க எலன் மஸ்க்-கிற்கு ஏற்கனவே கங்கனா ரனாவத் ஆலோசனை வழங்கிய நிலையில் பிரபலங்கள் மற்றும் தெய்வங்கள் பெயரில் ப்ளூ டிக் வாங்கப்படுவது இந்தியாவில் உள்ள முப்பத்து முக்கோடிக்கும் அதிகமான பயனர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.

தவிர ஏற்கனவே ப்ளூ டிக் வைத்திருக்கும் பிரபலங்களும் சந்தா தொகை செலுத்தி தங்கள் அக்கவுண்டுகளை தக்கவைத்துக் கொள்வதோடு மற்றவர்கள் அதனை தவறாக பயன்படுத்துவதில் இருந்து பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால், ட்விட்டர் வருமானத்தில் 50 சதவீதம், சந்தா தொகை மூலம் கிடைக்கவேண்டும் என்ற இலக்குடன் செயல்படும் எலன் மஸ்க்-கின் எண்ணம் விரைவில் ஈடேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.