2015-ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘பிரேமம்’.நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
சுமார் 5 ஆண்டுகள் கழித்து தனது அடுத்த படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் அல்போன்ஸ் புத்திரன். இந்தப் படத்தில் ஃபகத் பாசில் நாயகனாக நடிக்கவுள்ளார்.
இது தொடர்பாக அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பதிவில்
https://www.facebook.com/alphonseputhren/posts/10159070774622625
“எனது அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘பாட்டு’. ஃபகத் பாசில் நாயகனாக நடிக்கிறார். யுஜிஎம் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பு. இம்முறை நான் இசையமைப்பாளராகவும் மாறியுள்ளேன். திரைப்படம் மலையாளத்தில் எடுக்கப்படும். படத்தின் மற்ற நடிகர், நடிகையர், குழு பற்றிய விவரத்தை படம் எடுக்கப்படும்போது பகிர்கிறேன்”. என பதிவிட்டுள்ளார் .