பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானமாரி செல்வராஜ் , தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ‘விக்ரம்’ படத்தில் நடித்து வரும் ஃபகத் ஃபாசில், அப்படத்தை முடித்த பின் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.