பெங்களூர்:
கர்நாடகாவில் மே 4ந்தேதி முதல் தொழிற்சாலைகள் இயங்கும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முதல்கட்டமாக மார்ச் 24ந்தேதி முதல் ஏப்ரல் 14ந்தேதி 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் குறையாத நிலையில், 2வது கட்டமாக ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் அனைத்துவிதமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பல இடங்களில் தொழிற்சாலைகளை திறக்க முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 535 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், 216 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில், கர்நாடகாவில் அதிக தொற்றில்லாத பகுதிகளில் மே 4 முதல் தொழிற்சாலைகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel