அமெரிக்கா விசா பெற பேஸ்புக், டுவிட்டர் கணக்கு விபரம் அவசியம்!! டிரம்ப் அதிரடி

Must read

வாஷிங்டன்:

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவுக்கு வருவதை கட்டுபடுத்த எச்1பி விசாவில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்தார். தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசாவில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர தற்போது உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி அமெரிக்கா விசா பெறுவற்கான விண்ணப்பத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் பேஸ்புக், டுவிட்டர், இ-மெயில், தொலைபேசி எண் போன்ற விபரங்களை அவசியம் குறிப்பிட வேண்டும் என டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்த புதிய நடைமுறை மூலம் விசா விண்ணப்பதாரர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனரா? என அறிய முடியும் என அமெரிக்க குடியுரிமை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article