பேஸ்புக் தமிழச்சியால், திலீபன் மகேந்திரன் ஓட்டம்!?

Must read

ரவுண்ட்ஸ்பாய்:
aa
சுவாதி கொலை வழக்கு பத்தி  பரபரப்பா ஏதாச்சும் பேஸ்புக்ல எழுதிக்கிட்டிருந்த பேஸ்புக் தமிழச்சியும், திலீபன் மகேந்திரன் அப்படிங்கிற பையனும் டபுள் குழல் துப்பாக்கி மாதிரி செயல்பட்டுகிட்டு இருந்தாங்க.
ஆனா இடையில ரெண்டு பேருக்குள்ள என்ன லடாயோ… இந்த பையனை அந்த அம்மா, “காமக்கொடூரன், புள்ளிராஜா” அப்படின்னு எல்லாம் எழுத.. பதிலுக்கு அந்த பையன், “தமிழச்சி என் காதலைக் கெடுத்த.. குடிகெடுத்த கெழவி” அப்டினு எழுதினாரு. அதாவது வழக்கம்போல ரெண்டு பேரும் “நாகரீகமா” விமர்சிச்சிக்கிட்டாங்க.
download
இந்த நிலையில, “செத்துப்போன ராம்குமார் வீட்டுல, துக்க நேரத்துல இருந்த திலீபன் மகேந்திரன் அங்கிருந்தே தன்னோட கேர்ள் ப்ரண்டுக்கு ஆபாசமா சாட் பண்ணான்” அப்படின்னு ஒரு பதிவு போட்டாங்க தமிழச்சி. அதுக்கான ஸ்கிரீன் சாட்டுங்ளையும் போட்டாங்க.
அதுக்கப்புறம் திலீபன் மகேந்திரனை பேஸ்புக்ல காணோம்.  அந்த பையன் அக்கவுண்ட் டி ஆக்டிவேட் ஆகியிருக்கு.  ஆக, திலீபன் மகேந்திரனை பேஸ்புக்கிலேருந்து ஓட வச்சுட்டாங்க, பேஸ்புக் தமிழச்சி!

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article