பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தில் பயனர்களின் தகவல்கள் திருடு போனதை தொடர்ந்து, தற்போது அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தற்போது பயனாளர்களின் கடவுச்சொல் ரகசிய குறீயீட்டுக்கு மாற்றாமல் சேமித்து வைத்து உள்ளது.
எல்லா இணையத்தள நிறுவனங்களும் தங்களிடம் பதியும் தகவல்களில் பயனாளர்களின் கடவுச்சொல்லை மட்டும் ரகசிய குறியீட்டு முறையில் பதிவு செய்வார்கள். இதனால் அந்தந்த இணையத்தள நிறுவனங்களில் வேலை செய்பவர்களாலும் அந்தக் கடவுச்சொல்லை காணமுடியாது.
ஆனால் மார்ச் 21,2019 அன்று பேஸ்புக் நிறுவனத்தின் பொறியியல், பாதுகாப்பு மற்றும் தனி யுரிமைக்கான துணைத்தலைவர் வெ ளியிட்டுள்ள அறிக்கையில் , ஜனவரி மாதம் அவர்களின் பாதுகாப்புச் சோதனையை சரிபார்த்தபோது அதில் கோடிக்கணக்கான பயனாளர்களின் கடவுச்சொற்கள் அப்படியே சேமிக்கப்பட்டதாகவும், அதை பாதுகாப்பு ரகசிய குறீயிட்டு முறைக்கு மாற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
அதே போல் இந்த கடவுச்சொல் பேஸ்புக் நிறுவனத்தினைத் தவிர வேறு யாரும் இக்கடவுச் சொல்லை பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோல் யார் யாருடைய கடவுச்சொல் எல்லாம் ரகசியாக குறியீட்டு முறையால் சேமிக்க வில்லையோ அவர்களுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக கடவுச்சொல்லை மாற்றச்சொல்லி தகவல்கள் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதில் முகநூல் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் பயனாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்
எனவே பேஸ்புக் பயனாளர்கள் ஒருமுறை தங்கள் கடவுச்சொல்லை மாற்றுவது சாலச்சிறந்தது. குறைந்தது 6 மாதத்திற்கு ஒருமுறையாவது மாற்றுவது சாலச்சிறந்தது
-செல்வமுரளி