சிட்னி

க்கள் பதிவிடும் அனைத்து சர்ச்சை பதிவுகளுக்கும் முகநூலே பொறுப்பு என ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

முகநூலில் பல சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.  ஒரு சில வேளைகளில் இந்த பதிவால் பலரும் மனம் புண்படும் நிலையும் உண்டாகிறது.   இதைப் போல் ஆஸ்திரேலிய நாட்டில் சிறார் சிறையில் தண்டனை அனுபவித்த டைலான் வோலர் என்பவர் குறித்து முகநூலில் ஒரு பதிவு வெளியானது.   இதற்கு முகநூல் பயனாளிகள் மோசமான கருத்துக்களை தெரிவித்தனர்.

இது தொடர்பாகக் கடந்த 2017 ஆம் ஆண்டும் முகநூல் நிறுவனத்தின் மீது டைலான் வோலர் ஒரு அவதூறு வழக்கைத் தொடர்ந்தார்.   இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் முகநூல் நிறுவனம் அதில் வெளியாகும் கருத்துக்களுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது.   இதை எதிர்த்து முகநூல் நிறுவனம் மேல் முறையீடு செய்து இந்த வழக்கு ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

நேற்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “பொதுமக்கள் முகநூல் பக்கத்தில் வெளியிடும் சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு அதை வெளியிடும் பதிப்பாளரான முகநூல் நிறுவனமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.   பொது மக்கலின் பதிவுகளுக்கு அவர்களே பொறுப்பு எனக் கூறி முகநூல் நிர்வாகம் தப்பிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளது.