வாஷிங்டன்
டிரம்ப் ஆதரவாளர்கள் தொடங்கிய ’திருட்டை நிறுத்து’ என்னும் பக்கத்தை முகநூல் தடை செய்து நிறுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் டிரம்ப் பின்னணியில் உள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிடும் ஜோ பைடன் முன்னணியில் உள்ளார்.
இது குறித்து டிரம்ப் தேர்தல் வாக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி உள்ளார்.
மேலும் தனது வாக்குகளை திருடி ஜோ பைடனுக்கு அளிப்பதாகத் தேர்தல் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார்.
அவரது ஆதரவாளர்கள் இதையொட்டி ‘திருட்டை நிறுத்து’ (Stop the Steel) என ஒரு பக்கத்தைத் தொடங்கினர்.
முகநூல் நிர்வாகம் அதைத் தடை செய்து நிறுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel