சென்னை: குறைந்த காற்றத்த தாழ்வுபகுதி மேலும் வலும்பெறும் என்றும், அதனால், டெல்லி அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாடு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
அரசின் அத்தனை துறைகளும், மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படியும், பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதுடன், அதுதொடர்பாக உதவி எண்களையும் வெளியிட்டு உள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணித்திட மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்- தமிழக அரசு.
தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும், நாளை கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 20 செ.மீட்டருக்கும் கூடுதலாக மழை பெய்யும் என்பதால், அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணித்திட மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.
மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மீன்வளத் துறை இயக்குநருக்கும். கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கு கடந்த 23ம் தேதி அன்று அறிவுரை வழங்கப்பட்டு ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள படகுகளில், 1192 படகுகள் கரை திரும்பியுள்ளன. ஏற்கனவே ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்குச் செல்ல ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கு நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்களின் தொலைபேசி எண்
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆப. – (94999 56205.8800656753
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு திருமதி. கவிதா ராமு. இஆப. – (90032 97303)
திருவாரூர் மாவட்டத்திற்கு திருமதி. காயத்ரி கிருஷ்ணன், இஆப. – (73388 50002)
கடலூர் மாவட்டத்திற்கு திரு.எஸ்.எ.ராமன். இ.ஆ.ப. – (9445883226)
மீட்பு குழு
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு. தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 6 குழுக்கள் திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இது தவிர. தேவைக்கேற்பட சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பும் பொருட்டு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும் தலைமையிடத்தில் தயார் நிலையில் உள்ளன.
மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் மூலம், கனமழை எச்சரிக்கை வரப்பெற்ற மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அவசரகால எண்கள்
கட்டணமில்லா தொலைபேசி எண் : 1070
வாட்ஸ்அப் எண் : 94458 69848
மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள்
நாகப்பட்டினம்
கட்டணமில்லா தொலைபேசி எண் : 1077, 1800-233-4233
வாட்ஸ்அப் எண் : 84386 69800
மயிலாடுதுறை
கட்டணமில்லா தொலைபேசி எண் : 1077, 04364-222588
திருவாரூர்
கட்டணமில்லா தொலைபேசி எண் : 1077
வாட்ஸ்அப் எண் : 94885 47941
கடலூர்
கட்டணமில்லா தொலைபேசி எண் 1077
வாட்ஸ்அப் எண் :94899 30520