புதுடெல்லி: கடந்த 1,36,000 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் வாழ்ந்து அழிந்துபோன ஒரு பறவை வகை, பல்லாயிரம் ஆண்டு இடைவெளியில் 2 முறைகள் மீண்டும் மீண்டும் பரிணாமம் அடைந்து உயிர்த்தெழுந்த அதிசயம் கண்டறியப்பட்டுள்ளது.

பறக்காத, குட்டையான இறக்கைகளையும், நீண்ட விரல்களையும் உடைய ஒரு பறவை வகை, 1,36,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அழிந்துபோன பிறகும், சீர்திருத்தப் பரிணாம முறையில் மீண்டும் இரண்டு முறை உயிர்த்தெழுந்துள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகள் இடைவெளியில், இரண்டு முறை தனித்தனியாக இந்த சீர்திருத்தப் பரிணாமம் நடைபெற்றுள்ளது.

ஒரே பொதுவான முன்னோரில் இருந்து, ஒரே அல்லது ஒரேவிதமான கட்டமைப்புகள் வெளிப்படும்போது, இந்த சீர்திருத்த பரிணாமம் நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]