வாஷிங்டன்:
அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் நேற்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர்
மெக்மாஸ்டருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்,
இந்தியா – அமெரிக்கா உறவு குறித்தும் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டருடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பால் ரயானுடனும் அவர் சந்தித்து உரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது நடந்த பேச்சுவார்த்தை குறித்து பால்ரயான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கருடனான
சந்திப்பு இந்திய-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உடன்பாடுகள் குறித்தும், பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்க
பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை பகிர்ந்து கொண்டதின் மூலம் இந்தியா
மற்றும் அமெரிக்கா இடையான உறவு நன்கு வேரூன்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கான்சாஸ் மாநிலத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுக்கு
கண்டனத்தையும், வருத்தத்தையும் கூறியுள்ள அவர், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கருடன் அடுத்துவரும் ஆண்டுகளில்
இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.
இந்திய வெளியுறவுச் செயலாளர்
எஸ். ஜெய்சங்கர் ஏற்கனவே, ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகரிகளுடன் ஆலோசனை
நடத்தியுள்ளது நினைவுகூரத்தக்கது.