கொழும்பு:
லங்கையில் ஊரடங்கு நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அவரது வீடும், முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள் வீடுகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், போராட்டக்காரர்களின் கூடாரங்களுக்கு மகிந்தாவின் ஆதரவாளர்கள் தீ வைத்த நிலையில், பொதுமக்கள் பதில் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த சிறைக் கைதிகளையும் அழைத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள், ஆளுங் கட்சி எம்.பி.க்கள், மேயர், அரசியல் பிரமூகர்கள் உள்ளிட்டோரின் வீடுகள், நிறுவனங்கள், ஹோட்டல்கள், சொகுசு கார்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.

இதையடுத்து, இலங்கை முழுவதும் நாடு தழுவிய ஊரடங்கு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.