விருதுநகர்: விருதுநகர்   அருகே பட்டாசு ஆலையில்  இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி  2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட்டாசு தயாரிப்புக்கு பெயர் போனது, விருதுநகர், சிவகாசி மாவட்டங்கள். குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி  பகுதியில், தீப்பெட்டி தயாரிப்பு, அச்சுத் தொழில், பட்டாசு தயாரிப்பு என பல தொழில்கள் நடைபெற்று வருகின்றன. அருகே உள்ள விருதுநகர்,  சாத்தூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளிலும் ல் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள்  செயல்பட்டு வருகின்றன. மேலும் அனுமதியில்லாமலும் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், தடைகளை மிறி பல ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற ஆலைகளில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக அவ்வப்போது விபத்து ஏற்பட்டு  உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது

இந்த நிலையில் விருதுநகர் ஆர்ஆர் நகர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை  திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்து காரணமாக ஆலையில் இருந்த மூன்று அறைகள் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆகி உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெடி விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதாவது, பட்டாசு அலை தொழிலாளிகளான காளிராஜ், வீராக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாக உள்ளது.

இந்த ஆலை விபத்து குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்