க்னோ

த்தரப்பிரதேசத்தில் ஒரு காவலர் பணிக்கு தாமதமாக வருவது குறித்து அளித்த விளக்கக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது/

உத்தரப்பிரதேச மாநிலம் 44வது பட்டாலியன் பிரதேச ஆயுதப்படை (PAC) தளபதி ஆயுதப்படை காவலர் மது சுதன் சர்மா பணியில் அலட்சியமாக செயல்படுவதாக கூறி அதற்கு விளக்கம் அளிக்கக் கோரி கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியில் என்ற நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது/

அவர் முந்தைய நாள்  காலை 9 மணிக்கு வராமல், என்ன காரணத்தால் தாமதமாக பணிக்கு வந்தீர்கள் என மது சுதன் சர்மாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த காவலர் முறையாக சவரம் செய்யவில்லை என்றும் சீருடையும் முறையாக அணியவில்லை என்றும் அதில் புகார் கூறப்பட்டிருந்தது.

, மேலதிகாரிக்கு மது சுதன் சர்மா எழுதிய கடிதத்தில்,

“பிப்ரவரி 16ஆம் தேதி பணிக்கு தாமதமாக வந்ததற்கு காரணம், சில தனிப்பட்ட காரணத்தால் இரவில் என்னால் தூங்க முடியவில்லை. எனக்கும் என் மனைவிக்கும் தினமும் கடுமையான சண்டை ஏற்படுகிறது.

மனைவி என் மேல் அமர்ந்து எனது ரத்தத்தை குடிக்க முயற்சி செய்வதுப்போல் தினமும் கனவு வருவதால் என்னால் தூங்கமுடியவில்லை.

அவரால் எனக்கு கொடுங்கனவுகள் வருகின்றன. வாழ்வதில் நம்பிக்கை இழந்துவிட்டேன் ஆன்மிக முக்திக்கு வழிகாட்டுங்கள். இதனாலேயே தாமதமாக பணிக்கு வருகிறேன்

என விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது இந்த கடிதம் சமூக வலை தளங்களில் வைராலாகி வருகிறது.  இக்கடிதம் இணையத்தில் கசிந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கடிதம் உண்மையா, இல்லையா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.